கோவை: சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. பன்னாட்டு கூட்டு விமானப் படை பயிற்சியின் ஒரு பகுதியாக கண்காட்சி நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 15ம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 62 அரங்குகளில் ஹிந்துஸ்தான், பெல் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேஜஸ், Su-30MKI, Mig29K உள்ளிட்ட இந்தியாவின் அதிநவீன போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளன. ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 11.30 மணிக்கு கண்காட்சியை துவக்கிவைத்து பார்வையிடுகிறார்.
கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி!!
previous post