ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே காத்தக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (45). கமுதி அருகே பேரையூர் காவல்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவர், குடும்பத்துடன் முதுகுளத்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். தற்போது முதுகுளத்தூரில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். குடும்பப் பிரச்னையால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த ஏட்டு மூர்த்தி, இரவு 9.30 மணியளவில் பேரையூர் காவலர் குடியிருப்புக்கு சென்று வருவதாக கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், சக போலீசார் சென்று பார்த்துள்ளனர். அங்கு மூர்த்தி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.