சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குற்ற வழக்கு தொடர்பு துறையில் அரசு உதவி வழக்கு நடத்துநர் (கிரேடு 2) பதவிக்கான தேர்வை கடந்த 22ம் தேதி நடத்தியது. இத்தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் தேர்வாணைய இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள் அதாவது வருகிற 10ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘‘ஆன்சர் கீ சேலன்ஜ்” என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுரைகள், வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன என டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
உத்தேச விடைக்குறிப்பு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தேர்வு
0