வேகவைத்து மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 3 கப்,
மைதா – 1 கப்,
பொட்டுக்கடலை மாவு – ½ கப்,
அரிசி மாவு – 2 கப்,
காரப் பொடி – தேவையான அளவு,
பெருங்காய தூள் – ¼ டீஸ்பூன்,
கேசரி பவுடர் – சிறிது,
பீட்ரூட் சாறு – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – ேதவைக்கேற்ப.
செய்முறை:
மைதா மாவை ஆவியில் வேகவிட்டு எடுத்து உதிர்க்கவும். அதனுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை, காரப்பொடி, உப்பு, பெருங்காயம், மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு பிசையவும். பிசைந்த மாவை 3 பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகத்தை கையில் எண்ணெய் தொட்டு சிறு சிறு சீடைகளாக உருட்டி பிளாஸ்டிக் சீட்டில் போடவும். கேசரிப் பவுடரில் சிறிது பாலைச் சேர்த்து அந்த கலர் பாலினால் இன்னொரு பாகத்தை நன்குப் பிசைய கேசரி கலர் கிடைக்கும். அதையும் சிறு சிறு சீடைகளாகச் செய்து வேறொரு சீட்டில் போடவும். கடைசி பாகத்தில் பீட்ரூட் சாறை விட்டு பிசைந்தால் வெல்வெட் கலர் மாவு கிடைக்கும். அதையும் சிறு சிறு சீடைகளாக உருட்டி வேறொரு பேப்பரில் போடவும். வாணலியில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும் தனித் தனியாகப் போட்டு வறுத்து எடுக்கவும். எல்லா சீடைகளையும் வறுத்த பின் ஒன்றாகக் கலந்து விட்டால் ‘கலர்ஃபுல் சீடை’ கிடைத்துவிடும்.