சர்க்கரைவள்ளி பாயசம்
தேவையானவை:
சர்க்கரைவள்ளிக்கிழங்கு – ¼ கிலோ,
பொடித்த வெல்லம் – 1¼ கப்,
தேங்காய்ப்பால் – 2 கப்,
ஏலக்காய் தூள், சுக்கு தூள் – தலா ¼ டீஸ்பூன்,
நெய் – 1 டேபிள் ஸ்பூன்,
நெய்யில் வறுத்த முந்திரி – தேவையான அளவு.
செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். மசித்த கிழங்குடன் பொடித்த வெல்லம், நெய் சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடம் கிளறிக் கொண்டே கொதிக்க விடவும். கடைசியில் தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். ஏலக்காய் தூள், சுக்கு தூள், வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.