சிம்லா: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தனது மகள் பிரியங்கா காந்தியுடன் சிம்லாவுக்கு கடந்த திங்கட்கிழமை சென்றிருந்தார். அவர்கள் சிம்லாவின் புறநகரில் சராப்ராவில் உள்ள பிரியங்காவின் வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று திடீரென சோனியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக சிம்லாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
திடீர் உடல்நலக்குறைவு சிம்லா மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி
0