புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்லும் பயணிகள் ரயில் நேற்று காலை உபி மாநிலம் பில்பூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டியில் திடீரென புகை மூட்டம் சூழ்ந்தது. தீப்பிடித்துவிட்டதோ என்று அச்சமடைந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்தனர். ஒரு சிலர் உயிருக்கு பயந்து ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தனர். இதில் 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. விசாரணையில், தீயணைப்பான் கருவியை பயணிகள் சிலர் இயக்கியதால் புகைமூட்டம் ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.