
கார்டூம்: சூடானில் 24 மணி நேரம் போர் நிறுத்தம் இருக்கும் போதிலும் இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சூடானியர்கள் வெளியேறி செல்லும் நிலையில் இந்தியர்கள் தவிக்கின்றனர். உணவு, தண்ணீர் இல்லை, தங்கியிருக்கும் இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கர்தூம் நகரில் சிக்கியுள்ள இந்தியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.