Wednesday, February 21, 2024
Home » பாடப்புத்தகத்தில் டேட்டிங் மற்றும் உறவுகள் என்ற தலைப்பில் பாடமா?: சி.பி.எஸ்.இ. தலைமை விளக்கம்

பாடப்புத்தகத்தில் டேட்டிங் மற்றும் உறவுகள் என்ற தலைப்பில் பாடமா?: சி.பி.எஸ்.இ. தலைமை விளக்கம்

by Francis

சென்னை: சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் டேட்டிங் மற்றும் உறவுகள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என சி.பி.எஸ்.இ. தலைமை விளக்கம் அளித்துள்ளது. சி.பி.எஸ்.இ. 9ம் வகுப்பு பாடப்புத்தகம் ஒன்றில், டேட்டிங் மற்றும் உறவுகள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றதாக சமூக வலைதளங்களில் செய்தி வேகமாக பரவி வருகிறது. இதற்கு சில தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், சில தரப்பில் இருந்து ஆதரவுகளும் வந்த வண்ணம் உள்ளன. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், இந்த இளம் வயதில் இதுபோன்ற பாடம் அவசியமானதா என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கேட்டுள்ளனர். அதே சமயம், ஆதரவு தெரிவிப்பவர்களில் பலர், இந்த பாடப்பிரிவில் நவீன காலத்தில் இளம்பருவத்தினர் இடையே ஏற்படும் காதல் மற்றும் இணைய நட்பு, இணையதள காதல், சீண்டல் உள்ளிட்டவற்றை விளக்கமாக மாணவர்களுக்கு புரியும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதற்கு சி.பி.எஸ்.இ. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. தலைமை அலுவலக ‘எக்ஸ்’ தள பக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது. அவ்வாறு வெளியாகும் பாடத்தின் உள்ளடக்கம் ககன்தீப் கவுர் எழுதிய ‘‘சுய விழிப்புணர்வு மற்றும் அதிகாரமளிப்பதற்கான வழிகாட்டி’’ என்ற புத்தகத்தில் இருந்து வெளியானது. இதை சி.பி.எஸ்.இ. வெளியிடவில்லை. அதேபோல், எந்த ஒரு தனியார் பதிப்பகத்தின் புத்தகங்களையும் சி.பி.எஸ்.இ. பரிந்துரைக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த இந்த செய்திக்கு சி.பி.எஸ்.இ. நேற்று விளக்கம் அளித்து, அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

You may also like

Leave a Comment

7 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi