மதுரை: சுப உதயகுமாருக்கு பாஸ்போர்ட் வழங்குவது குறித்து மதுரை மண்டல அதிகாரி பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற என் மீதான வழக்கில் பாஸ்போர்ட் முடக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டில் வழக்கு பதிந்து பெற்ற பாஸ்போர்டின் தேதி முடிய உள்ளதால் புதிய பாஸ்போர்ட் வழங்கவேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில் மனுத்தாக்கல் செய்ய நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.