சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா, அமெரிக்காவின் புளோரிடா விண்வெளி ஏவு தளத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்கா, ஹங்கேரி மற்றும் போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் பயணம் சென்றுள்ளார். இவர்கள் ஆக்சியம் 4 என்கிற ஆய்வுக் கலத்தின் மூலம் நேற்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தனர்.
இங்கு, சுபான்சு சுக்லா ‘பயிர்களை விளைவித்தல்’ உள்ளிட்ட ஏழு பிரிவு ஆய்வுகளை மேற்கொள்வார் என்ற தகவல் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைமை, தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானியின் பொறுப்பில் இருந்து வரும் காலத்தில், இந்த சாதனை பயணம் ஆய்வுத் தளத்தில் சிகரம் தாண்டி சிறந்து விளங்க வாழ்த்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.