சென்னை: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பகல் 12.30 மணி அளவில் திருச்சியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர். பின்பு ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: நீட் தேர்வை யார் கொண்டு வந்தது என்பது இப்போது பிரச்னை அல்ல. மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவையா, தேவை இல்லையா என்பதுதான் கேள்வி. ஆனால் தற்போது மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவை இல்லை. மதுரையில் அதிமுக மாநாடு நடந்து முடியட்டும். அதன்பின்பு எனது கருத்தை தெரிவிக்கிறேன்.