திருமலை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நூலகருக்கு ெபற்றோர் தர்மஅடி கொடுத்தனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் நுலகர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இயங்கி வருகிறது. இங்கு நூலகராக பணிபுரிந்துவரும் பானுபிரகாஷ் நாயக் என்பவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். மேலும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்ேறார் மற்றும் உறவினர்கள் நேற்று பள்ளிக்கு சென்றனர். அங்கு பானு பிரகாஷ் நாயக்கை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த அனந்தபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கண்முன் பெற்றோர் மீண்டும் பானுபிரகாஷ் நாயக்கை சரமாரி தாக்கினர். உடனடியாக போலீசார் தடுத்து பானுபிரகாஷ் நாயக்கை மீட்டனர். பின்னர் இதுதொடர்பாக விசாரித்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.