சென்னை: நம் மாணவர்களின் கல்விக்காக செய்யும் திட்டங்களை விட வேறு என்ன எனக்கு மகிழ்ச்சி இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கொளத்தூரில் பெரியார் அரசு மருத்துவமனையை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். கொளத்தூர் என்னுடைய தொகுதி என்பதை விட நம்முடைய தொகுதி; நான் முதல்வன் திட்டம் மூலம் 2.60 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இளைஞர்களை ஊக்குவிக்க வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது எனவும் பேசியுள்ளார்.
நம் மாணவர்களின் கல்விக்காக செய்யும் திட்டங்களை விட வேறு என்ன எனக்கு மகிழ்ச்சி இருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
0