கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கிருஷ்ணராயபுரம் குறுவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெ ற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரெத்தினம் பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.கரூர் மாவட்டம் கிருஷ் ணராயபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கிருஷ்ணராயபுரம் குறுவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
இதில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கபாடி போட்டியில் முதலிடமும்,17 வய திற்குட்பட்ட மாணவர்களுக்கான கபாடி போட்டியில் முதலிடமும்,19 வயதிற்குட்பட்ட மாணவ ர்களுக்கான பூப்பந்து போட்டியில் முதலிடமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கேரம் போட்டியில் முதலிடமும் பெற்றனர். பள்ளித் தலைமையாசிரியர் வீ.ரெத்தினம், தலைமையில் துணை தலைமை ஆசிரியர்.
ராஜசேகரன் முன்னிலையில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கியும், அம்மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள். செந்தில்வேலன்,பேபி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார்.