திருவாரூர்: திருவாரூர் அடுத்த விளமல் தெற்கு வீதியை சேர்ந்தவர் நவீன்ராஜ்(17). இவரது நண்பர் திருவாரூர் கூட்டுறவு நகரை சேர்ந்த பிரகாஷ்ராஜ்(17). இருவரும் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர விண்ணப்பித்து காத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு கடைத்தெருவுக்கு இருவரும் ஸ்கூட்டியில் சென்றனர். அப்போது பாத்திமா காலனி அருகே, காரைக்காலில் இருந்து மேட்டூருக்கு நிலக்கரி ஏற்றி சென்ற லாரிக்கு வழி விடுவதற்காக நவீன்ராஜ் ஸ்கூட்டியை சாலையோரம் ஒதுங்க முயன்றார். அப்போது ஸ்கூட்டியுடன் சக்கரம் சறுக்கி இருவரும் விழுந்தனர். இதில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் இருவரும் பலியாகினர்.
ஸ்கூட்டி மீது லாரி மோதி 2 மாணவர்கள் பலி
0