*பிளாஸ்டிக்கை ஔிப்போம் என உறுதிமொழி
காரைக்கால் : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஓஎன்ஜிசி, இந்திய கடலோர காவல்படை, காரைக்கால் துறைமுகம், காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்போம் என்ற கருப்பொருளுடன் கடற்கரையில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.தூய்மை பணியை கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது் கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் குறித்து மக்களிடையே ஓளரவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனதனின் உள்ளத்திலும் அதன் முக்கியத்துவம் உணரப்படும் நிலை ஏற்படவேண்டும்.
மரங்கள் வளர்ப்பு, ஆரோக்கியமான மண், சுத்தமான நீர் ஆகியவை ஆரோக்கியமான நிலைக்கு இன்றியமையாதவையாகும் இயற்கையும், சுற்றுச்சூழலும் தன்னைத் தானே கட்டமைத்துக் கொண்டு, தனது பருவகால நிலைகளை சரியாக கணித்துக்கொண்டு, மனித குலத்திற்கு மகத்தான நன்மைகளை செய்து வருகிறது. அந்த இயற்கைக்கும் அதன் வளங்களுக்கும் தீமை ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலை காக்க உறுதி ஏற்போம் என்றார்.
காரைக்கால் மாவட்ட நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் தலைமையில் மாணவர்கள் கலந்துகொண்டு, கடற்கரை சுற்றுவட்டாரத்தில் தூய்மைப் பணியை மேற்கொண்டு, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களை சேகரித்து நகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். கடற்கரைக்கு வந்த மக்களிடம், தூய்மை குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.