சென்னை: தமிழகத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளதாக தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுமார் 32 ஆயிரம் அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் அனைத்து வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு ஆண்டிலும் மார்ச் மாதம் தொடங்கிய மாணவர் சேர்க்கை இதுவரையில் 3 லட்சத்தை தாண்டியுள்ளதாக தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 17ம் தேதி வரையில் எல்கேஜி வகுப்பில் 22757 குழந்தைகள் சேர்ந்துள்ளனர். 1ம் வகுப்பு (தமிழ் வழி) 1 லட்சத்து 72 ஆயிரத்து 676, 1ம் வகுப்பு (ஆங்கில வழி) 52057, இரண்டாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் 65391 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 3 லட்சத்து 12 ஆயிரத்து 881 பேர் சேர்ந்துள்ளனர்.
சென்னையில் இயங்கும் பள்ளிகளில் 17985, செங்கல்பட்டு-9528, திருப்பூர்-9385, சேலம்-8573, தென்காசி-8019 அதிகபட்சமாகவும், நீலகிரி-1327, தாராபுரம்-2082, கோவில்பட்டி-2544, தேனி-2559, ஒட்டன்சத்திரம்-2013 குறைந்தபட்சமாகவும் சேர்ந்துள்ளனர்.