தூத்துக்குடி:தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்2 பயிலும் 2 மாணவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு டியூசன் முடிந்து வரும் வழியில் இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டு இருதரப்பாக மோதிக் கொண்டனர். இதில் பிளஸ் 2 மாணவர்கள் இருவரை தனியார் கல்லூரி மாணவர் உள்பட 12க்கும் மேற்பட்டோர் தாக்கி வாளால் வெட்டி உள்ளனர்.
இதுகுறித்து காயமடைந்த ஒரு மாணவணின் தந்தை சிப்காட் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் கல்லூரி மாணவர் உள்பட 12 பேர் மீது கொலை முயற்சி, அவதூறாக பேசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே மாணவர்களை வெட்டிய கும்பலை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கல்லூரி மாணவரை பிடிக்க தனிப்படையினர் பெங்களூரு விரைந்துள்ளனர்.