திருவனந்தபுரம்: கேரளாவில் 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த பிரபல ஜோதிடரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சனன் (56). பிரபல ஜோதிடர். அதே பகுதியிலுள்ள ஒரு தலித் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உண்டு. இவர் அப்பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி மீது ஆசைப்பட்ட ஜோதிடர் சுதர்சனன், அவரது தந்தைக்கு பண உதவி செய்து வந்து அந்தக் குடும்பத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். பணம் தேவைப்படும் போது மாணவியை தன்னுடைய கடைக்கு அனுப்பி வாங்கிக் கொள்ளுமாறு குடும்பத்தினரிடம் அவர் கூறியுள்ளார்.
அதை நம்பி கடந்த சில மாதங்களுக்கு முன் பணம் வாங்குவதற்காக அந்த மாணவி சுதர்சனின் கடைக்கு சென்றுள்ளார். அப்போது ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை சுதர்சனன் கடைக்குள் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். மேலும் பலாத்காரம் செய்ததை ஆபாச படமாகவும் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆபாச படத்தை காட்டி பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சக மாணவிகள் பள்ளி ஆசிரியையிடம் கூறினர். அதிர்ச்சியடைந்த ஆசிரியை வைக்கம் போலீசில் புகார் கொடுத்தார். கோட்டயம் அருகே உள்ள குரவிலங்காடு பகுதியில் தலைமறைவாக இருந்த சுதர்சனனை போலீசார் கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.