சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தந்தையை இழந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்து வைராக்கியம் கொண்டு படித்து ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று நாட்டின் உயரிய அரசுக் கல்வி நிறுவனமான ஐஐடியில் உயர்கல்வி பயில தகுதியடைந்துள்ள சேலம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரியை மனதார வாழ்த்துகிறேன்.
அவரது விடாமுயற்சியும் உறுதியும் இன்றைய இளைய தலைமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. அவர் மேன்மேலும் நன்றாகப் படித்து தனது வாழ்வில் மேலும் பல வெற்றிப் படிகளை ஏறி தனது குடும்பத்தையும் சமுதாயத்தையும் முன்னேற்றி பெருமை சேர்க்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.