தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் அரசு குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கியதாஸ் (47). தனியார் பள்ளி ஆசிரியராக இருந்தார். 4 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்ல வில்லை. இவரது மனைவி, அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் வீட்டிற்கு உறவினரின் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி விடுமுறைக்கு வந்துள்ளார். ஆரோக்கியதாஸ், மனைவி இல்லாத நேரத்தில் சிறுமியிடம் தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
பெற்றோர் வீட்டிற்கு சென்ற சிறுமியின் உடல்நிலையில், கடந்த சில நாட்களாக மாறுதல் ஏற்பட்டுள்ளது. மகளின் உடல்நிலையை கவனித்த பெற்றோர், சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்போது ஆரோக்கியதாஸ் தவறாக நடந்து கொண்டதை கூறியுள்ளார். உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதுபற்றி சிறுமியின் பெற்றோர், தேவகோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து, ஆரோக்கியதாஸை கைது செய்தனர்.