செங்கல்பட்டு: செங்கல்பட்டில், பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ வழங்கினார். செங்கல்பட்டு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி என மொத்தம் ஏழு பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில், மொத்தம் 1199 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் இலவச மிதிவண்டிகளை வழங்கி, அறிவுரைகளை கூறினார். இந்நிகழ்வில், செங்கல்பட்டு நகராட்சி நகர் மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலக ஆய்வாளர் சிவக்குமார், பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகரன், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள் யாஷ்மின்பேகம், சந்தோஷ் கண்ணன் உள்பட ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.