வாலாஜாபாத்: வாலாஜாபாத் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாசிலாமணி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் கலந்துகொண்டு, பிளஸ்1 படிக்கும் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
தொடர்ந்து, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படிக்கும் ஸ்ரீநிதி என்ற மாணவி, தாய்லாந்தில் நடந்த சிலம்பாட்ட போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை எம்எல்ஏ சுந்தரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது, சுந்தர் எம்எல்ஏ மாணவிக்கு ரொக்க பணமாக 5 ஆயிரம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி ஸ்ரீதர், துணை தலைவர் சுரேஷ்குமார், பேரூர் செயலாளர் பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
மதுராந்தகம்: உத்திரமேரூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ராஜுவீ வரவேற்றார். நிகழ்ச்சிக்கு உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் தலைமை தாங்கி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
உத்திரமேரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கம்மாளம் பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருப்புலிவனம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, மானாமதி அரசினர் மேல்நிலைப்பள்ளி, பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, களியாம்பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 7 பள்ளிகளில் பிளஸ்1 பயிலும் 903 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட கவுன்சிலர் பத்மாபாபு, துணை தலைவர் இளமதி கோவிந்தராஜ், அவைத்தலைவர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வாயலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் மோகனா தலைமை தாங்கினார். தலைமையாசிரியை எழில் பாவை முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு மாணவ, மாணவிகள் 30 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதில் மாவட்ட கவுன்சிலர் கலாவதி, ஒன்றிய திமுக செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.