ஸ்ரீபெரும்புதூர்: ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சாய்வினய் (22). இவர், ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இசிஇ 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த சாய்வினய், 6வது மாடியில் நின்றிருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த சாய்வினாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீபெரும்புதுார் போலீசார், சாய்வினாய் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.