சென்னை: தமிழ்நாடு உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2025-26ம் ஆண்டிற்கான மாணவக்கர்கள் சேர்க்கை தொடர்பான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 7ம் தேதி தொடங்கி எவ்வித இடர்பாடும் இன்றி மாணவர்களின் பயன்பாட்டிற்காக தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. இதுவரை இந்த இணையதளத்தில் மொத்தமாக 2,07,915 மாணவர்கள் இணையவழியாக விண்ணப்பித்துள்ளனர்.
இதில், இதுவரை 81,923 மாணவர்கள் வெற்றிகரமாக சேர்க்கை பெற்றுள்ளனர். தற்போது 3ம் கட்ட மாணவர் சேர்க்கை செயல்முறைகள் நடக்கின்றன. மேலும், முதுநிலை மற்றும் பி.எட். பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பப்பதிவும் தற்போது இந்த இணையதளத்தின் மூலமே தொடங்கப்பட்டு மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். செய்திதாளில் வெளிவந்துள்ள செய்திபோல் இந்த இணையதளத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லை.
மாணவர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. www.tngasa.in என்ற இணையதளதில் மட்டும் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் tndce.tn.gov.in என்ற இணையதளம் மூலமும் சென்று இந்த மாணவர் சேர்க்கை இணையதளத்தை சென்றடையலாம். எனவே, செய்திதாளில் வெளிவந்துள்ள செய்தி குறித்து மாணவர்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம்.