Wednesday, June 18, 2025
Home செய்திகள்Showinpage எளிய பிரச்னைகளை கூட எதிர்கொள்ள முடியாத மனநிலை; அற்ப காரணங்களால் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைகள்

எளிய பிரச்னைகளை கூட எதிர்கொள்ள முடியாத மனநிலை; அற்ப காரணங்களால் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைகள்

by MuthuKumar

சிறப்பு செய்தி

‘‘செல்போன் பார்ப்பதை கண்டித்ததால் மாணவி தற்கொலை, தேர்வில் தோல்வியால் மாணவர் தற்கொலை, விரும்பிய பைக்கை வாங்கிக் கொடுக்காததால் மாணவர் தற்கொலை, தோழி பேசாததால் சிறுமி தற்கொலை’’ என்று தினமும் செய்திகள் தொடர்கிறது. இது அற்ப காரணங்களுக்காக தற்கொலைகள் நிகழ்வதை உறுதி செய்து கொண்ேட இருக்கிறது.

தேசிய குற்ற ஆவண காப்பக ஆவ வருகிறது. 2019முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் 35,990 மாணவர்கள் தற்ணங்களின் கணக்குப்படி இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு முதல் மாணவ, மாணவியர் தற்கொலை அதிகரித்துகொலை செய்துள்ளனர். 2022, 2023, 2024ம் ஆண்டுகளில் இதுமேலும் அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசின் புள்ளிவிபரங்கள் படி 43,300 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் நடப்பாண்டும் (2025) மாணவ, மாணவியர் தற்கொலை என்பது தொடரும் அவலமாகவே உள்ளது. நீட் உள்ளிட்ட உயர்கல்விகள் ஏற்படுத்தும் தோல்வி பயத்தால் மனஉளைச்சல் ஏற்பட்டு இறப்பை தழுவும் மாணவர்கள் தமிழகம் போன்ற மாநிலங்களில் அதிகரித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான பத்தாம்வகுப்பு, பிளஸ்2 தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர். எனவே இதற்கொரு தீர்வு காண அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

அதேநேரத்தில் விரக்தி, கோபம், தாழ்வுமனப்பான்மை போன்றவற்றால் தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்ைக அதிகரித்து வருவது அபத்தமானது. எளிதாக தீர்வு தரும் பிரச்னைகளை கூட, எதிர்கொள்ள முடியாமல் இளையதலைமுறையினர் உயிரை மாய்ப்பது குடும்பத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் அபாயகரமானது. பொதுவாகவே நம்நாட்டில் இளைய சமுதாயத்திற்கு மனவலிமை என்பது குறைந்து வருகிறது. தோல்வியை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் அவர்களிடம் இல்லை. பொறுப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை, தங்களை விட வயதானவர்களிடமிருந்து கிடைக்கும் அனுபவம் என்பது சமீபஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதே உண்மை. அவர்களிடம் இருக்கும் அளவுக்கதிமான எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெரும்பாலும் தோல்வியில் முடிகிறது. இதனால் ஏற்படும் விரக்தியின் உச்சமே அவர்களை தற்கொலை முடிவுகளுக்கு தூண்டுகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

தற்ேபாதைய தலைமுறை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு தனிப்பட்ட கருத்தோ, பார்வையோ கிடையாது. அப்படியே ஒரு கருத்ேதா அல்லது பார்வையோ இருந்தாலும் அது மேலோட்டமாகவும், ஆழமற்றதாகவும் இருக்கிறது. இவர்கள் அனுபவம் வாய்ந்த நபர்களால் வழிநடத்தப்படுவதை விட, சமூக வலைதளங்களால் வழிநடத்தப்படக்கூடியவர்களாகவே உள்ளனர். இவர்கள் தங்களது கருத்துகளை எளிதில் மாற்றிக் கொள்ளக்கூடியவர்களாகவும் உள்ளனர். இப்படிப்பட சூழலில் தற்கொலை குறித்த செய்திகள் வரும் போது அதில் ஈர்க்கப்படுகின்றனர். இதுவே சமீப ஆண்டுகளாக அதிகரிக்கும் மாணவர் தற்கொலைக்கு அடிப்படை காரணமாக உள்ளது என்கின்றனர் அவர்கள். இது குறித்து உளவியல் சார்ந்த சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: ஒரு குழந்தை நமது மடியில் தவழ்ந்து கையை பிடித்து நடக்கும் போதே வாழ்க்கை என்றால் என்ன என்பதை பெற்றோர் சொல்லித்தர வேண்டும்.

குழந்தைகளின் மனது என்பது ஒரு அப்பழுக்கற்ற வெள்ளைக்காகிதம். அதில் பெற்றோர் பதியவைக்கும் சிந்தனைகளே முதலில் ஆழமாக பதிகிறது. எனவே குழந்தைகளின் மனம் வளர்ச்சி நிறைந்தாக இருக்க வேண்டுமானால் பெற்றோர் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். நாம் பேசுவதை தான் குழந்தைகள் உன்னிப்பாக கேட்கிறது. நாம் பார்ப்பதை தான் அவர்களும் பார்க்கிறார்கள். உதாரணமாக வீட்டில் நாம் தொலைக்காட்சி பார்த்தால் அவர்களும் பார்க்கின்றனர். செல்போன் பேசினால் அவர்களும் கேட்கின்றனர். வீட்டில் நடக்கும் விவாதங்களும் அவர்களின் செவிகளில் நுழைகிறது. நமது வேலைகள் எளிதாக முடியும் என்பதற்காக பெரும்பாலான பெற்றோர் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கின்றனர். பின்னர் பாதிப்பு என்று உணரும் போது அதை பயன்படுத்தக்கூடாது என்கின்றனர். பெற்றோரை பொறுத்தவரை குழந்தைகளை கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பதும், அரவணைத்து ஊக்கமூட்ட வேண்டிய நேரத்தில் அதைச் செய்வதும் மிகவும் அவசியம். அவர்களிடம் நாம் காட்டும் அன்புக்கும், செல்லம் என்ற பெயரில் கோழையாக்குவதற்கும் உள்ள வித்தியாசத்தை பெற்றோர் கண்டிப்பாக உணரவேண்டும்.இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

1990க்கு பிறகே நெருக்கடிகள்
‘‘மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் நாட்டின் தற்கொலைகள் சராசரியைவிட மாணவர்களின் தற்கொலைகள் பெருகிவருவது அச்சமூட்டும் வகையில் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மாணவர் தற்கொலைகளின் ஆண்டு சராசரி 6,654ல் இருந்து 13,044 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக 1990களுக்குப் பிறகு, தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரித்த நிலையில் மாணவர்களின் நெருக்கடி வெகுவாக அதிகரித்திருக்கிறது. கல்வி நிறுவனங்களுக்கு இடையில் நடக்கும் போட்டியில் அதிகமான சுமையை மாணவர்கள் தலையில் சுமத்த ஆரம்பித்தார்கள். இந்த காலகட்டத்துக்குப் பிறகுதான் மாணவர்களிடம் பதற்றம், மன அழுத்தம் ஆகியவை அதிகரித்திருக்கின்றன. இந்த அழுத்தத்திலிருந்து விடுபட தற்கொலையை நாடுவது, கல்வி நிறுவன சொத்துகளை அழிப்பது, வன்முறையை நாடுவது ஆகியவை ஒரு தீர்வாக அவர்கள் மனதில் படுகின்றன. இந்த விவகாரத்தில் தீர்வைத் தேடும்போது இதனையும் மனதில்கொள்ள வேண்டும்,’’ என்கின்றனர் சட்டவல்லுநர்கள்.

தமிழகத்தில் 14 சதவீதம்
தேசிய அளவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு தற்கொலைகள் மகாராஷ்டிரம், தமிழ்நாடு மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலேயே நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஒட்டுமொத்த தற்கொலையில் 29 சதவிகிதம் இந்தியாவின் தெற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலேயே நிகழ்கின்றன. மிகவும் போட்டிநிறைந்த கல்விச்சூழலையும் கொடூரமான கோட்டா பயிற்சி மையங்களையும் கொண்ட ராஜஸ்தான் மாநிலமே இந்த பட்டியலில் 10வது இடத்தில்தான் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. கடந்தாண்டில் மகாராஷ்டிராவில் 1,764 தற்கொலைகளும் (14சதவீதம்), தமிழ்நாட்டில் 1,416 தற்கொலைகளும் (11சதவீதம்) மத்தியப்பிரதேசத்தில் 1,340 தற்கொலைகளும் (10 சதவீதம்), உத்தரப்பிரதேசத்தில் 1,060 தற்கொலைகளும் (8சதவீதம்) மற்றும் ஜார்கண்டில் 824 தற்கொலைகளும் (6சதவீதம்) நடைபெற்றுள்ளன என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

விபரீதங்களுக்கு இதுவே அடித்தளம்
‘பெற்றோரால் தங்கள் குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிட முடியவில்லை. அதனால் குழந்தைகளுக்கு யாரை நம்புவது? யாரிடம் பிரச்னைகளை சொல்வது என்று தெரியவில்லை. மற்றொரு புறம் தன்னால் முடியாததை தங்கள் குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே 64சதவீதம் பெற்றோரின் இலக்காக உள்ளது. நாம் சிரமப்பட்டாலும், நமது குழந்தைகள் சிரமப்படக்கூடாது என்று 82சதவீதம் பெற்றோர் நினைக்கின்றனர். இதனால் தங்கள் சக்திக்கு மீறியும் பலபெற்றோர் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றனர். இவை அனைத்திற்கும் மேலாக சமீபகாலமாக குழந்தைகளின் கல்வி செலவிற்காக செலவிடும் பணம் என்பது குடும்பத்திற்கான ஒரு முதலீடு என்றே நினைக்கின்றனர். இதை மனதில் கொண்டு அவர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் சில அழுத்தங்களும் பிள்ளைகளுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தி விபரீத முடிவுகளை எடுக்க வைக்கிறது,’’ என்பதும் உளவியல் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறும் தகவல்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi