கோவை: அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்டோர் மீது காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.