சென்னை: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சிவா விஜயன் தொடர்ந்த வழக்கில், ஆக.27 மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் போராட்டம் நடத்த ஐகோர்ட் நீதிபதி அனுமதி அளித்துள்ளார். வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்த நிலையில் நிலைமை சீரடைந்துவிட்டதால் போராட்டம் தேவையில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.