பெங்களூரு: மத சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி. 64 வயதான இவர் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அதிகாலை 2 மணியளவில் திடீர் உடல்நலக்குறைவால் பெங்களூரு ஜெயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட குமாரசாமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். முழுமையாக குணமடைந்த குமாரசாமி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றார்.
முன்னதாக பேசிய எச்.டி.குமாரசாமி, பக்கவாதத்தை மக்கள் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அறிகுறிகள் தெரிந்ததும் உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். எனக்கு 64வது வயதில் 3வது பிறப்பை கடவுள் கொடுத்துள்ளார். ஆகஸ்ட் 30ம் தேதி பின்னிரவு 2 மணிக்கு பக்கவாதத்திற்கான அறிகுறிகளை உணர்ந்தேன். நான் மறுநாள் காலை மருத்துவமனைக்கு சென்றிருந்தால் இனிமேல் எனது மொத்த வாழ்க்கையையும் படுக்கையிலேயே கழித்திருக்க நேர்ந்திருக்கும் என்றார்.