Sunday, February 25, 2024
Home » போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

by Ranjith

சென்னை: நிதி கூடுதலாக செலவாகும் விஷயங்களை நிதித்துறையுடன் ஆலோசிக்க வேண்டியிருப்பதால், ஒரு நாள் அவகாசம் கேட்டிருக்கிறோம். நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன. இந்நிலையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அப்போது வேலை நிறுத்தத்தை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சரிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. பிற்பகல் 3.20 மணியளவில் முடிந்தது.

அப்போது தொழிற்சங்கங்கள் தரப்பில்,”போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மட்டுமே அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதில்லை. எனவே, உடனடியாக வழங்க வேண்டும், நிலுவையை பிறகு பார்த்துக் கொள்ளலாம், பணியில் இருப்போருக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு வழங்குவதோடு, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான கெடுவை அறிவிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தப்படடது. அதற்கு அரசு தரப்பில் போக்குவரத்துக் கழகங்களில் அகவிலைப்படி உயர்வு கொடுத்தால் பிற துறைகள் பாதிக்கப்படும் என நிதித்துறை கூறியுள்ளது.

இன்று கலைஞர் நூற்றாண்டு விழா உள்ளது. எனவே ஆலோசித்து நாளை முடிவை அறிவிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  பின்னர் அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், நிதி கூடுதலாக செலவாகும் விஷயங்களை நிதித்துறையுடன் ஆலோசிக்க வேண்டியிருப்பதால், ஒரு நாள் அவகாசம் கேட்டிருக்கிறோம். நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலகண்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) தலைவர் அ.சவுந்தரராஜன் கூறுகையில். அமைச்சரின் முடிவுக்காக காத்திருக்கிறோம். அதுவரை வேலைநிறுத்த முடிவு தொடரும்’’ என்றனர்.

* பணிக்கு வர வேண்டும்
போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கை: போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும். எனவே, வேலை நிறுத்தத்தில் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் கலந்துகொள்ளாமல் அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்தவிதமான விடுப்புகளையும் தவிர்த்து பணிக்கு ஆஜராக வேண்டும். மேலும் சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும்.

You may also like

Leave a Comment

one + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi