சென்னை: ஸ்டிரைக் அறிவித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்பாடு எட்டப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.