சென்னை: சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை திருத்தம் செய்ய 3 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் : சென்னை மாநகராட்சியில் கடந்த 2023ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சாலையோர வியாபாரிகளுக்கான ஏற்கனவே வழங்கப்பட்ட அடையாள அட்டையில் உள்ள விவரங்களில் ஏதேனும் திருத்தம் தேவைப்படுவோர், வழங்கப்பட்ட அடையாள அட்டையை நகல் எடுத்து அதில் எந்த திருத்தம் தேவைப்படுகிறது என குறிப்பிட்டு அதற்கான ஆதாரத்துடன் கையொப்பமிட்டு, இன்று முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் சம்மந்தப்பட்ட வட்டார அலுவலகத்தில் உள்ள முதுநிலை வருவாய் அலுவலர்களிடம் வழங்கலாம்.