சென்னை : சென்னை மாநகராட்சியில் தெருநாய்களை கட்டுப்படுத்த மேலும் 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் தெருநாய்களை பிடிக்கும் பணிகளுக்காக 16 நாய்கள் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. 2021-25 வரை 66,285 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தெருநாய்களை கட்டுப்படுத்த மேலும் 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம்!!
0