சென்னை: பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கும் ஒன்றிய பாஜ அரசின் நடவடிக்கையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயலாளர்கள் ஏ.கே.கரீம், ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரஷீத் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ., மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழக காங்கிரஸ் துணை தலைவர் கோபண்ணா, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.