புதுடெல்லி: டெல்லியில் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் 11 ஆண்டு சாதனை குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ கடந்த 5 ஆண்டுகளில் கனமழை, மூடுபனி மற்றும் வெப்ப அலைகள் போன்ற பிற கடுமையான வானிலை நிகழ்வுகளின் முன்னறிவிப்புக்கள் 40 சதவீதம் மேம்பட்டுள்ளது. பருவ மழை முன்னறிவிப்பும் ஒரு பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.
உலகளாவிய வானிலை மாதிரியான பாரத் முன்னறிவிப்பு அமைப்பு 2025ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. தேசிய பருவமழை திட்டத்தின் கீழ் புள்ளி விவரங்களில் இருந்து இயற்கை அடிப்படையிலான மாதிரிகளுக்கு நகர்கிறது. இது பருவகால கணிப்புக்களின் துல்லியம் மற்றும் இடஞ்சார்ந்த தீர்மானத்தை கணிசமாக மேம்படுத்துகிறது” என்றார்.