சென்னை நகர் முழுவதும் வீட்டு வாயில்களில் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தியிருந்தால் என்ன நடவடிக்கை? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களை அப்புறப்படுத்தி நோ-பார்க்கிங் பலகை வைக்கப்பட்டுள்ளது, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.