தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் உள்ள தனியார் கல் குவாரியில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக குவாரி உரிமையாளரின் தம்பி கமலதாசன், குவாரி பொறுப்பாளர் கலையரசன், மேற்பார்வையாளர் ராஜ்குமார் ஆகிய 3 பேரை, போலீசார் கைது செய்தனர். இதனிடையே பல்வேறு விதிமீறல்கள், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் குவாரி நடத்தப்பட்டதால் கல் குவாரி உரிமத்தை கலெக்டர் ஆஷா அஜித் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.
உரிமம் காலாவதியான நிலையில் இயங்கியதை கண்காணிக்க தவறிய கனிமவளத்துறை ஆர்ஐ வினோத்குமார், மல்லாக்கோட்டை விஏஓ பாலமுருகன் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், விதிகளை மீறி சட்ட விரோதமாக கற்களை வெட்டி எடுத்ததற்காகரூ.91 கோடி அபராதம் செலுத்த தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நகல் தனியார் கல் குவாரி உரிமையாளர் மேகவர்ணம் வீட்டில் நேற்று ஒட்டப்பட்டுள்ளது.