ஆண்கள் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய ராணுவ வீரர் அவினாஷ் சேபிள் தகுதி பெற்றார். 28 தடைகளை தாண்டி, தண்ணீர் மீது தாவி ஒடும் கடினமான இப்போட்டியில், அவினாஷ் பந்தய தூரத்தை 8 நிமிடம், 15.43 விநாடிகளில் கடந்து ஹீட்-2ல் 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். ஆண்கள் ஸ்டீபிள்சேஸ் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.