மும்பை: மராட்டியத்தில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை முழுமையாக உடைந்து விழுந்து நொறுங்கியது. சிந்துதுர்க் மாவட்டத்தில் 2023 டிசம்பர் மாதம் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை தலை, கை, கால் என தனித்தனியாக சுக்குநூறாக நொறுங்கியது. பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களில் விழுந்து நொறுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.