புதுடெல்லி: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்பு (ஏடிஆர்) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களின் போது தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட 4,809 எம்பி, எம்எல்ஏக்களின் பிரமாணப் பத்திரங்களில் 4,693 ஆய்வு செய்யப்பட்டது. அதில், 16 எம்பிக்கள் மற்றும் 135 எம்எல்ஏக்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வழக்கை சந்தித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 25 சிட்டிங் எம்பி, எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. ஆந்திராவில் 21 பேரும், ஒடிசாவில் 17 பேரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும், 2 எம்பிக்கள், 14 எம்எல்ஏக்கள் மீது சட்டப்பிரிவு 376ன் கீழ் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு உள்ளவர்களில் பாஜ கட்சியினரே (54 எம்பி, எம்எல்ஏக்கள்) அதிகம் உள்ளனர். காங்கிரஸ் (23) 2வது இடத்திலும், தெலுங்கு தேசம் (17) 3வது இடத்திலும் உள்ளன.