சென்னை: அமைப்பு தேர்தல் முடிவுகள் சம்பந்தமான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக மாநில அமைப்பு தேர்தல் மேல்முறையீட்டு குழுவை அமைத்து பாஜ தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜ தலைமை வெளியிட்ட அறிக்கை: அமைப்பு தேர்தல் முடிவுகள் சம்பந்தமான பிரச்சனைகளை முறையீட்டு, அதன்பேரில் தீர்வு காணும் விதமாக மாநில அளவில் அமைப்பு தேர்தல் மேல்முறையீட்டு குழு அமைக்கப்படுகிறது. மாநில மேல் முறையீட்டு குழுவிடம் முறையீடு செய்ய tn.sangathanparv2024@bjp.org என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 9150021838 என்ற வாட்ஸ்அப் எண்ணை பயன்படுத்தலாம்.
இதில் வரும் முறையீடுகள் மட்டுமே அதிகாரபூர்வமாக எடுத்துக் கொள்ளப்படும். மாநில அமைப்பு தேர்தல் மேல்முறையீட்டு குழு மாநில இணைப் பொருளாளர் சிவ சுப்பிரமணியன் அமைப்பாளராக, மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் இணை அமைப்பாளராகவும், மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இணை அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.