Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைஞர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது

சென்னை: கலை பண்பாட்டுத்துறை, நுண்கலைப்பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சியினை (மரபுவழி / நவீனபாணி பிரிவில்) தொடர்ந்து நடத்தி, சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி வருகிறது.

அவ்வகையில் 2024-2025 ஆம் நிதியாண்டில் மாநில அளவிலான ஓவிய- சிற்பக் கலைக்காட்சி நடத்தி. ஓவியக்கலை பிரிவில் (மரபு வழி / நவீனபாணி) சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் 36 வயதிற்கு மேற்பட்ட 15 மூத்தக் கலைஞர்களுக்கு தலா ரூ.20,000/- வீதமும், 35 வயதிற்குட்பட்ட 10 இளங்கலைஞர்களுக்கு தலா ரூ.10,000/- வீதமும், சிற்பக்கலை பிரிவில் (மரபுவழி / நவீனபாணி) சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் 36 வயதிற்கு மேற்பட்ட 15 மூத்தக் கலைஞர்களுக்கு தலா ரூ.20,000/-வீதமும், 35 வயதிற்குட்பட்ட 10 இளங்கலைஞர்களுக்கு தலா ரூ.10,000/-வீதமும் என 50 கலைஞர்களுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.

2024-2025 ஆம் நிதியாண்டில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சியினை நடத்திட ஏதுவாக, முதற்கட்டமாக தமிழ்நாட்டினை சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து ஓவியங்கள் மற்றும் சிற்பங்களின் புகைப்படங்கள் பின்வரும் விதிமுறைகளின்படி வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) பதிவிறக்கம் செய்யலாம்.

ஓவிய, சிற்பக் கலைக்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் கலைஞர்கள் தங்களின் புகைப்படத்துடன் (Passport Size Photo) கூடிய தன்விவரக் குறிப்புடன் (பெயர், பிறந்த தேதி. கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வித் தகுதிகள், படைப்பின் தலைப்பு. படைப்பின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன்) ஓவியங்கள்/ சிற்பங்களின் (10 x 12 Size) இரண்டு புகைப்படங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

* கலைஞர்கள் மரபுவழிப் பிரிவிலோ அல்லது நவீனபாணி பிரிவிலோ என ஏதேனும் ஒரு பிரிவில் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். 1.1.2024-க்கு பின்னர் கலைப்படைப்பு (ஓவியம் / சிற்பம்) உருவாக்க / படைக்கப்பட்டிருத்தல் வேண்டும். கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக கலைச்செம்மல் விருது பெற்றவர்கள். கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தோர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கக் கூடாது. தமிழ்நாட்டினை சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்கள் மட்டும் இதில் பங்குபெறுதல் வேண்டும். ஆதார் அடையாள அட்டை நகல் இணைத்தல் வேண்டும்.

ஓவியர்கள் மற்றும் சிற்பிகளிடமிருந்து பெறப்படும் புகைப்படங்களில் இருந்து, கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தெரிவுக்குழுவின் மூலம் சிறந்த புகைப்படங்கள் மாநில அளவிலான ஓவிய சிற்ப கலைக்காட்சிக்கு தெரிவு செய்யப்பட்டு, தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் உரிய விவரங்கள் இவ்வலுவலகத்தினால் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் அசல் ஓவியப் படைப்புகளும், சிற்பங்களும் பெறப்பட்டு கலைக்காட்சியில் வைக்கப்படும்.

கலைக்காட்சிக்கு வைக்கப்படும் அசல் ஓவிய, சிற்ப படைப்புகளில் சிறந்த 50 கலைப்படைப்புகள் தெரிவுக்குழுவால் பரிசுக்கு தேர்வு செய்யப்படும். மேற்காணும் விவரங்களின் அடிப்படையில் உரிய தன் விவரக்குறிப்புடன் ஓவியங்களின் / சிற்பங்களின் புகைப்படங்களை பின்வரும் முகவரிக்கு 30.11.2024- க்குள் அனுப்பி வைக்க கலைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.