சென்னை: மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது என்ற தனது கூற்றை ஆளுநர் ரவி திரும்பப் பெற வேண்டும், ஆளுநர் பொறுப்பில் இருந்து ரவி விலக வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார். “ஆளுநர் ரவியின் கருத்து, அவர் வகிக்கும் பொறுப்பிற்கு மிகவும் கண்ணியக்குறைவான செயல் எனவும், ஆளுநர் கருத்து உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, மாணவர்களை பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயல்” எனவும் தெரிவித்துள்ளார்.