சென்னை: தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலை மறு சீரமைப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பு : உணவுத்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 23 பேர் கொண்ட இந்த கவுன்சிலில், வேலூர் எம்பி கதிர் ஆனந்த், தஞ்சாவூர் எம்பி முரசொலி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா, உணவுத்துறை செயலாளர், சிவில் சப்ளை ஆணையர், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளர், டேன்ஜென்கோ தலைவர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர், மாநில அளவிலான வங்கியாளர் குழுவின் உதவி பொது மேலாளர், பிஎஸ்ஐ தென் மண்டல துணை இயக்குனர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை ஆணையர், தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்க தலைவர், மதராஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர், எத்திராஜ் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் பல்வேறு நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் இதில் இடம் பெற்றுள்ளனர். நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த கவுன்சில், நுகர்வோர் நலன் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.