சென்னை: அரசு பள்ளியில் பாரமரிப்பு இல்லாத சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலியான மாணவனின் தந்தைக்கு இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. தருமபுரி குடிமியம்பட்டியில் 2016ல் பள்ளியில் கழிப்பறைக்கு சென்றபோது சுற்றுச்சுவர் இடிந்து மாணவன் உயிரிழந்தான். மாணவன் விஷாலின் தந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை 4 வாரத்தில் வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. பள்ளி கட்டடங்கள் பாரமரிப்பு தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து உறுதி செய்ய வேண்டும். மாணவனின் தந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தர அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது.
மாணவன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க பரிந்துரை..!!
0