கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் மகன் சிவகுமார் விசாரணைக்கு ஆஜரானார். கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி ஞானசம்பந்தம் மகன் சிவக்குமார் விசாரணைக்கு ஆஜரானார். கோடநாடு வழக்கில் மூளையாக செயல்பட்ட கனகராஜ் விபத்தில் சிக்கியபோது ஞானசம்பந்தம் 108-க்கு தகவல் அளித்தவர்.