தண்டையார்பேட்டை: உலக இதய தினத்தை முன்னிட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடந்த பேரணியை ஐட்ரீம்ஸ் மூர்த்தி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக இதய தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. உலக இதய தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க விழிப்புணர்வு பேரணி மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த பேரணியை ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனை வளாகம் முழுவதும் இந்த பேரணி நடைபெற்றது.

மேலும் மக்களைத்தேடி மருத்துவம், வருமுன் காப்போம் போன்ற பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனளிக்கின்றன. இத்திட்டங்கள் மூலம் பல்வேறு சிகிச்சைகள் அளிப்பதில் இம்மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது,’’ என்றார். மூத்த இதயவியல் நிபுணர் சொக்கலிங்கம் ‘இதய நோய்கள் தடுப்பு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இத்துறையின் சார்பாக செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் இதய நோய்களுக்கு சிகிச்சை பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. நோய் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதயநோய் தடுப்பதற்கான உணவுமுறைகள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டது. இதில் மருத்துவமனை முதல்வர் பாலாஜி, பேராசிரியர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்ட்னர்.


