மதுரை: சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது. பிள்ளைகளை முறையாக வளர்க்க வேண்டும். குழந்தைகளை முறையாக அறிவுறுத்தி வளர்க்க வேண்டிதில் பெற்றோருக்கு அதிக பொறுப்பு உள்ளது. ஓட்டுநர், நடத்துனர் அறிவுறுத்தல்களை ‘ஏற்காமல் மாணவர்கள் சாகசம் என நினைத்து பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கின்றனர். பேருந்துகளின் படிக்கட்டுகளில் பயணம் செய்வது மோட்டார் வாகன விதியின் படி தண்டனைக்குரிய குற்றம். பயணத்தின் போது மாணவர்கள் பேருந்திற்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு
0