Wednesday, July 9, 2025
Home செய்திகள் ஒன்றிய அரசு துறைகளில் 2423 இடங்கள் : ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வு அறிவிப்பு

ஒன்றிய அரசு துறைகளில் 2423 இடங்கள் : ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வு அறிவிப்பு

by Porselvi

தேர்வு: எஸ்எஸ்சி செலக்‌ஷன் போஸ்ட் எக்சாம்-2025- (பேஸ்-13). மொத்த காலியிடங்கள்: 2423.

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பணியின் பெயர்கள் விவரம்:

DEO/MTS/Junior Engineer/Examiner/Canteen Attendant/Manager/Technician/Taxidrmist/Photo Assistant/Office Superintendent/Assistant/Conservator/Junior Technical Assistant/Medical Attendant/Library and Information Assistant/Technical Superintendent (weaving)/Engine Driver (Master Grade-II)/Fireman/Syrang of Lascars/Engine Driver-II/Labortatory Attendant/Girl cadet Instructor/ Senior Scientific Assistant/Technical Operator/Instructor/Library Attendant/Farm Assistant/Ayurvedic Pharmacist/Nursing Officer/Workshop Attendant/Mechanic/Court Master/Accountant/Dark Room Assistant/Stenographer/Stores Clerk/Store Attendant/Chargeman/Junior chemist/Senior Photographer/Caretaker/Draftsman/Radio Mechanic/Civil Motor Driver/Textile Designer/Cook/Operator (ordinary grade)/Store keeper/ Fertilizer Inspector/Sub Divisional Officer/Radiographer/Library Clerk/Lab Assistant/Sub editor/Proof Reader/Health Worker/LDC/UDC/Dental Technician/ECG Technician/Ayah/Research Assistant/Junior Computer Operator.

சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
தகுதி: 10/பிளஸ் 2/ஐடிஐ/டிப்ளமோ/பட்டப்படிப்புடன் விண்ணப்பிக்கும் பணிக்குரிய தொழிற்நுட்ப கல்வித்தகுதி அல்லது பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பணி வாரியாக விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வித்தகுதி விவரம், துறை வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. வயது: 1.8.2025 தேதியின்படி 10ம் வகுப்பு அடிப்படையிலான பணிகளுக்கு 18 முதல் 25 வயதிற்குள்ளும், பிளஸ் 2 வகுப்பு அடிப்படையிலான பணிகளுக்கு 18 முதல் 27க்குள்ளும், டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு அடிப்படையிலான பணிகளுக்கு 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்வு ஜூலை 24ம் தேதி முதல் ஆக.4ம் தேதி வரை நடைபெறும். எழுத்துத் தேர்வில் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும். ஒரு மணி நேரம் தேர்வு நடைபெறும். தேர்வில் பொது ஆங்கிலம், பொது அறிவு, குவாண்டிடெட்டிவ் அப்டிடியூட், பொது நுண்ணியல் அறிவு ஆகிய பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மையங்களில் நடைபெறும்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
www.ssc.gov.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.06.2025.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi